துபாயில் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கையால் பரபரப்பு

துபாய்: ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரக அரசின் அவசர எச்சரிக்கை முறை வாயிலாக நேற்று துபாயில் உள்ள பொதுமக்களின் செல் போன்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வந்தது.

அதில் பொதுமக்கள் பாதுகாப்பான கட்டிடங்களுக்கு செல்லவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை விட்டு விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது அங்குள்ள மக்களை பீதியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஆனால் எச்சரிக்கை வந்த சில நிமிடங்களிலேயே முந்தைய எச்சரிக்கையை புறக்கணிக்கவும் என அறிவிக்கப்பட்டது. அது தவறுதலாக அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

Related Stories: