×

அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு

 

சென்னை: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கருப்பணன், பாலகிருஷ்ண ரெட்டி, அன்பழகன், கே.சி.வீரமணி, காமராஜ், கோ.அரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டன. கட்சி பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்ததை வாபஸ் பெற்று மன்னிப்பு கடிதம் வழங்கிய நிலையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்

Tags : Velumani ,Atamug ,Chennai ,Tangamani ,Adamugat ,S. B. Velumani ,Natham Viswanathan ,Karupanan ,Balakrishna Reddy ,Anbhagan ,K. C. Weeramani ,Kamaraj ,Co. Ari ,M. R. ,Vijayabaskar ,
× RELATED சொன்னதை நிரூபித்தால் அரசியலை விட்டு...