ஆபாச சைகை காட்டி பெண்ணுக்கு டார்ச்சர் தவெக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்கு: மேலும் பலருக்கு தொந்தரவு?

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண், தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், ரெடிமேட் துணி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அப்பெண்ணின் வீட்டின் அருகே தவெக தொழிற்சங்க நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் பாபு (எ) ஆசிக் பாபு (38) என்பவர், மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார்.

ஆசிக் பாபு அப்பெண் பணிக்கு செல்லும்போது, ஆபாசமாக பேசுவது, ஆபாச சைகை செய்வதுமாக டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதுகுறித்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில், ஆபாசமான செயலில் ஈடுபட்டது உள்பட 3 பிரிவுகளின் கம்பம் தெற்கு போலீசார் பாபு (எ) ஆசிக் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து ஆசிக் பாபு, மனைவி, குழந்தையுடன் தலைமறைவாகி விட்டதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சமீப காலமாக தவெக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தவெக நிர்வாகி ஆசிக் பாபு மீதும் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் ஆசிக் பாபுவை விரைவில் கைது செய்ய வேண்டும். அவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்படுள்ளதாக கூறப்படுவதால், போலீசார் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* மாணவிகளிடம் சில்மிஷம்; போதை ஆசாமிக்கு தர்மஅடி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஏராளமான மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்தவர் ராஜா (42) என்பதும், மது போதையில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: