மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.18 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.

அவற்றை திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனர்.

இதில் சிறிய ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. வாரச்சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள், ரூ.18 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: