- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- நியூயார்க்
- ஜம்மு
- காஷ்மீர்
- ஐ.நா.
- பாதுகாப்பு
- சபை
- யூனியன் பிரதேசம்
- இந்தியா...
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதற்காக பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்து உள்ளது.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்றும், அது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அர்ரியா-ஃபார்முலா கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்ட இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளுக்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் உள்ள, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்ச்சை என்று பாகிஸ்தான் வாதிட்டது. காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற இந்தியாவின் கருத்தை தங்களால் ஏற்க முடியாது என பாகிஸ்தான் குறிப்பிட்டது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பர்வதனேனி ஹரிஷ், தனது அரசியல் ஆதாயத்திற்காக ஐநா சபையின் முறைசாரா கூட்டத்தைப் பயன்படுத்தியதாலும், இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து தேவையற்ற கருத்துக்களைக் கூறியதாலும் பாகிஸ்தானை கண்டிப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக, இந்தக் கூட்டத்திற்கு பாகிஸ்தான் ஒரு ‘இணைத் தலைவர்’ (Co-chair) பொறுப்பில் இருந்தது. நடுநிலையாகச் செயல்பட வேண்டிய நிலையில், கூட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்பி அரசியல் செய்தது நம்பமுடியாத ஒன்று என பார்வதனேனி ஹரீஷ் சாடினார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இருக்கும்” என்று தூதர் ஹரீஷ் திட்டவட்டமாகக் கூறினார்.
