×

சிறுமியை 2வது திருமணம் செய்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை 2வது திருமணம் செய்த வழக்கில் தவெக நிர்வாகி நேற்று போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் 17வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், சிறுமியின் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு போலீசார் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், 17வயது சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு தெரியாமல் கார்த்திக் திடீரென திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சிறுமியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கும், கார்த்திக் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை நேற்று கைது செய்தனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெகவினர் பேசி வரும் நிலையில், சிறுமியை 2வது திருமணம் செய்த வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

* சிறுமி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கடலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நொச்சிக்காடு பகுதியை சேர்ந்த செல்வநாதன்(25) என்பவர், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதும் செல்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், செல்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை அந்த 28 வயதான இளம்பெண், தனது வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலத்திற்கு மாட்டிற்கு புல் அறுக்க சென்றுள்ளார்.

அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சக்ரவர்த்தி (45) என்பவர், திடீரென வழிமறித்து அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பிச்சென்று தனது கணவரிடம் விபரத்தை கூறியுள்ளார். அவர், இரவு நேரமாகி விட்டதால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு படுத்து விட்டார். நேற்று காலை எழுந்ததும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மத்தூர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்று, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சக்ரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

Tags : Thaveka ,POCSO ,Trichy ,Karthik ,Kambarasampettai ,Andhanallur Thaveka Union ,
× RELATED செங்கல்பட்டு அருகே சிறுமியை கூட்டுப்...