ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் வீட்டில் தனியே இருந்த 80 வயது மூதாட்டிக்கு, ஆஸ்துமா மருந்து என மயக்க மருந்தைக் கொடுத்து வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் மர்ம நபர் திருடிச் சென்றார். வீட்டையும் வெளியில் இருந்து பூட்டிவிட்டு அந்நபர் தப்பிய நிலையில், மயக்கம் தெளிந்து ஜன்னல் வழியே மூதாட்டி கூச்சலிட, பூட்டை உடைத்து அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர்
