தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

டெல்லி: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய வாகனங்களின் மதிப்பிற்கேற்ப, பேன்சி எண் கட்டண விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த காலக் கட்டணங்களைக் காட்டிலும் 2 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேன்சி எண் கட்டணம் தொடர்பாக வரைவுத் திருத்த அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பேன்சி எண் பெறுவதற்கு யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், இடைத்தரகர்களை நம்பி அரசு விதித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை யாரும் செலுத்த வேண்டாம் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து, 2,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அரசு உயர்த்த உள்ள கட்டணம், தற்போதுள்ளதை விட, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: