- உயர் கல்வி அமைச்சர்
- விஸ்வநாதன்
- மேலூர், மதுரை
- மதுரை
- தமிழ்நாடு அரசு
- காங்கிரஸ்
- மேலூர்
- மேலூர், மதுரை மாவட்டம்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது. ஓட்டப்பந்தயத்தில் பெண் குழந்தைகளுக்கு காலில் சொடுக்கு போட்டுவிட்டதுடன், அவர்களின் கால்களை பிடித்துவிட்டார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கிறர்கள்.
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பெண் குழந்தைகளிடம் அமைச்சர் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி, இணையத்தில் பலர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டனர். அமைச்சர் என்பதால் பெண் குழந்தைகளிடம் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா? குழந்தைகளுடன் பழகும் போது, அவர்களின் தனிப்பட்ட எல்லைகளையும், மரியாதைகளையும் மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் மேலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. இந்த விழாவினை உயர்கல்வி துறை அமைச்சரும், மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஸ்வநாதன், தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் விஜய்யின் சினிமா பாடல் ஒன்றுக்கு அமைச்சர் விஸ்வநாதன் மேடையில் ஆடினார்.
விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது. இதனை சிலர் தவறு என்று விமர்சித்துள்ளார்.
