சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். “கடன் பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 2 விவசாயிகள் தற்கொலை செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை செலவாக பார்க்க வேண்டாம்” என சௌமியா அன்புமணி பேசினார்.
