×

33 போட்டியில் 100 கோல் 68 ஆண்டில் புதிய உச்சம்!

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தி வரும் நடப்பு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வெறும் 33 போட்டியிலேயே கோல் எண்ணிக்கையில் சதமடித்து 68 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் மிக விரைவாக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பித்தக்கது.

ஜூன் 12ம் தேதி மெக்சிகோவின் ஜூலியன் குயினோன்ஸ் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் கோல் போட்டு தொடங்கி வைக்க, ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் கோடி கக்போ போட்ட கோல் 100வதாக அமைந்து இந்த சாதனையை சாத்தியமாக்கி இருக்கிறது. ஹூஸ்டனில் நடந்த அந்த எப் பிரிவு போட்டியில் நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனைப் பந்தாடியது. நெதர்லாந்து சார்பில் பிரையன் பிராப்பே 5வது மற்றும் 17வது நிமிடத்தில் கோல் அடிக்க, கோடி கக்போ 47வது, 54வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார்.

கடைசி தருணத்தில் சம்மர்வில்லி (89வது நிமிடம்) தன் பங்குக்கு ஒரு கோல் போட்டார். ஸ்வீடன் தரப்பில் அந்தோனி எலங்கா (59’) ஆறுதல் கோல் அடித்தார். முன்னதாக, 1978 மற்றும் 1994ல் தலா 38 போட்டிகளிலும், 1982 மற்றும் 2014 உலக கோப்பையில் தலா 36 போட்டிகளிலும் 100 கோல் அடிக்கப்பட்டிருந்தது. 1954ல் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் வெறும் 20 போட்டியிலேயே கோல் எண்ணிக்கை சதத்தை நிறைவு செய்ததே அதிவேக சாதனையாகும்.

Tags : World Cup football ,United States ,Mexico ,Canada ,
× RELATED உலகக் கோப்பை குத்துச்சண்டை...