×

வார இறுதி நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும், பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,560க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,800க்கும் விற்பனையானது. வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED ஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!