×

இந்தியா முழுவதும் 21ம்தேதி நடைபெறும் நீட் தேர்வு முறையாக நடத்தப்பட வேண்டும்

 

கந்தந்வகோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும் போது: இந்தியாவின் தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி எதிர்வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவிகளுக்கு சரியான முறையில் சிறப்பு பேருந்து வசதியை ஜோசப் விஜய் அரசு செய்து கொடுக்க வேண்டும். தேர்வு எழுத வரும் பெண் பிள்ளைகளுக்கு துணையாக வரும் பெண்களுக்கு தேர்வு மையத்திற்கு வெளிப்புறம் வெயில், மழையில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கொட்டகை அமைந்தும், கழிவறை வசதி செய்து தர வேண்டும். தேர்வாளர்களை சோதனை என்ற பெயரில் மன வேதனை ஏற்படுத்தக் கூடாது. இரண்டு மணிக்கு தொடங்கும் தேர்விற்கு காலை முதலே தேர்வாளர்களை தேர்வு அறையில் அமர வைத்து மனசோர்வை ஏற்படுத்தக் கூடாது. எழுதும் தேர்வு அறையில் குளுக்கோஸ், தூய குடி நீர் வசதியும், கழிவறை மேலும் அதில் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

Tags : NEET ,India ,Kandharvakottai ,Pudukkottai ,National Testing Agency of India ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...