- முகுடி பிரசாதம் தன்வந்திரி லெஹியம்
- வேலூர் மாவட்டம்
- அனந்தலை
- ஸ்ரீ தன்வேந்திரி சுகாதார பீட
- வாலாஜப்பேட்டை அனந்தலை
- இறைவன்
- தன்வேந்திரி
வேலூர் மாவட்டம் – வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக திகழ்ந்து வருகை புரியும் பக்தர்கள் நோய் நொடிகளின்றி வாழவும், நோயுற்றவர்கள் விரைவில் குணம் பெறவும், தன்வந்திரி வைத்தியரிடம் வேண்டி இங்கு நடைபெறும் கூட்டு பிரார்த்தனையிலும் யாகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை கொண்டு, தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.
முக்குடி கஷாயம்
இத்தலத்தில் இருபத்தெட்டு வகையான மூலிகைகளுடன் தயிர் கலந்து முக்குடி கஷாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கஷாயம் குழந்தை பாக்கியம் வேண்டியும், தீராத நோய் தீரவும், மனநோய் விலகவும், வயிறு சம்மந்தமான உபாதைகள் அகலவும், தன்வந்திரி பகவானுக்கு பிரார்த்தனை செய்து அருட்பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
தன்வந்திரி லேகியம்
நெய், சுக்கு, திப்பிலி, மிளகு, வெல்லம் போன்ற பொருட்களுடன் வீர்யமிக்க மூலிகைகள் கலந்து தன்வந்திரி சந்நதி முன் சமையல் பாத்திரங்கள் வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்தை சொல்லி லேகியம் செய்து தன்வந்திரி மூலவருக்கு நிவேதனம் செய்து நோய் தீர்க்கும் ஔஷதப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பிரசாதத்தை உட்கொள்பவருக்கு நரம்பு சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், வயிறு சம்மந்தமான உபாதைகள், வாதம், பித்தம், கபம் போன்றவைகளால் உண்டாகும் பல்வேறு நோய்கள் விலகவும், இரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் இறைவனின் அருளால் நிவாரணம் பெறுகின்றனர்.
தன்வந்திரி தைலம்
எள்ளு எண்ணெயுடன் ஒருசில முக்கிய மூலிகைகள் கலந்து தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கண்நோய், நீரிழிவு நோய், தோல் சம்மந்தமான நோய், காக்கா வலி போன்ற நோய்கள் நீங்கி பயன் கிடைப்பதாக பயன் பெற்ற பக்தர்கள் மூலமாக அறிய முடிகிறது.
