- சிங்கப்பூர்
- புதுக்கோட்டை
- விஜய்
- செரியலூர் ஜாமின் கிராமம்
- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம். எஸ்சி
- தமிழ்
- மாறன்
- வடக்கு பெரியார் நகர்
- Keeramangalam
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மாறன்(56) இவரது மகன் விஜய்(30) எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மாறன் அவருக்கு அறிமுகமான கீரமங்கலம் வடக்கு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பெரியசாமி(55) தனக்குத் தெரிந்த கீரமங்கலம் வடக்கு பெரியார் நகரைச் சேர்ந்த தமிழ்மணி மகன் இளவரசன் (வயது 32) சிங்கப்பூரில் உள்ளார். அவர் பலரை அதிக சம்பளத்திற்கு வெளிநாடு அனுப்புகிறார். அதனால் எம்.எஸ்.சி. பட்டதாரியான உங்கள் மகனை வெளிநாடு அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு ரூ.7 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கூறி முதல் தவணையாக ரூ. 20 ஆயிரம் ஆன்லைன் மூலம் பெற்றவர் தொடர்ந்து ரூ.6 லட்சத்தி 85 ஆயிரத்தை தனது வீட்டில் உள்ள தனது தம்பி இயலரசனிடம் கொடுக்கச் சொன்னதால் மொத்த பணத்தையும் இளவரசன் வீட்டில் அவரது மனைவி சகோதரி முன்னிலையில் இயலரசனிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்று கொண்ட இளவரசன், போலி வேலை வாய்ப்பு ஆவணத்தை விஜய்யிடம் கொடுத்துள்ளார். இதனை நம்பி சிங்கப்பூர் சென்ற விஜய், அங்கு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் வேறு ஒரு நிறுவனத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கே பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அந்த நிறுவனம் தொழிலாளர் விரோதமாகச் செயல்பட்டதைக் கண்டறிந்த சிங்கப்பூர் அதிகாரிகள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை விசாரணைக்கு அழைத்து அவர்களுக்கான பாஸ்களை ரத்து செய்துள்ளது. இதில் தமிழ்மாறன் மகனும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழ்மாறன், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இளவரசனிடம் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தமிழ்மாறன் புகார் கொடுத்துள்ளார்.
இது சம்மந்தமாக தமிழ்மாறன் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் பெரியார் நகர் இளவரசன், பெரியசாமி, இயலரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலிசார் இயலரசனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
