×

திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்: தங்கம் தென்னரசு!

 

சென்னை: தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது; தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியீடு. தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது புதிதல்ல, ஏற்கனவே 2 முறை வெளியிடப்பட்டுள்ளது. 2021ல் 15 ஆண்டுகால நிதிநிலையை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை மட்டும் எடுத்துக்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் காரணம் என்ன? யாரைக் காப்பாற்ற முந்தைய ஆட்சியின் காலத்தை வெள்ளை அறிக்கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

திமுக ஆட்சி பற்றி கூறும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு, அதிமுக ஆட்சியை பற்றி கூற தயங்குவது ஏன்? மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள தவெக, மக்களிடம் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியிட்டது. தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை வெளியீடு. யாருடைய தயவை எதிர்பார்த்து அதிமுக ஆட்சிக் காலத்துக்கு விலக்கு அளித்துள்ளார்கள்? 2001ல் 10 ஆண்டுகால நிதிநிலையை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டார் ஜெயலலிதா. தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் நிறைவேற்ற முடியாது என்பதையே தவெக சொல்கிறது. நிதிநிலை எவ்வாறாக இருந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக அரசு.

ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை அறிவிக்காமல் தவிர்க்கவே முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியீடு. தேர்தலுக்கு முன்னர் கூறியபடி வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியது திமுக. எங்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதன் வெளிப்பாடே அரசின் வெள்ளை அறிக்கை. ஜெயலலிதா ஆட்சி செய்தகாலத்திலும் தமிழ்நாட்டு கடன் இருமடங்கானது. திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்.

தவெக அரசு கடன் வாங்காமல் தவிர்க்க முடியுமா? என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். ஒவ்வொரு 5 ஆண்டுகாலத்திலும் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை போன்ற தமிழ்நாட்டு நலத்திட்டம் போல் குஜராத்தில் எந்த திட்டமும் இல்லை. எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தாத குஜராத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதா? தமிழ்நாட்டை குஜராத்துடன் ஒப்பிடுவது சரியா என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசு அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மூலதன செலவில் வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மூலதன செலவுடன் திமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த தவெக முயற்சி. பரந்தூர் விமான நிலையம், ஈசிஆர் உயர்மட்ட சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நிறுத்திவைத்துள்ளது தவெக அரசு. கடும் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டி வரி சீரமைப்பு செய்து தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்தது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் செயல்பாடே காரணம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Dimuka ,Gold South Rasu ,CHENNAI ,DAVEKA GOVERNMENT ,Dweka ,
× RELATED தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று...