×

குதிரை பேரத்துக்கு ஆதாரம் உள்ளதா?.. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

 

சென்னை: குதிரை பேரம் நடந்துள்ளதற்கான ஆதாரம் உள்ளதா என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதிசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டந்த மே 13-ம் தேதி தமிழக அரசின் மீது நம்பிக்கை வாக்களிப்பு நடைபெற்றது. அப்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க. தரப்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அந்தக் கடிதம் பேரவைத் தலைவரின் பரிசீலனையில் நிலுவையில் இருந்த நிலையிலேயே, திடீர் திருப்பமாக கடந்த மே 25-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்தியபாமா ஆகிய மூவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, மே 27-ம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவிகளை ராஜினாமா செய்த கையோடு, இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.கவில் (தமிழக வெற்றிக் கழகம்) தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைவு நிகழ்ச்சிகள் அனைத்தும் தலைமை செயலகத்திலே நடைபெற்றதாகவும், அங்கேயே அவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் மிகப்பெரிய அளவில் குதிரை பேரம் நடந்துள்ளதால், இதன் பின்னணியைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; குதிரை பேரம் நடந்துள்ளதற்கான ஆதாரம் உள்ளதா? ஆதாரம் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். தொடர்ந்து தனி மனிதனாக ஆதாரங்கள் சேகரிக்க முடியாது என்பதால் சிபிஐ விசாரணை கோருவதாக மனுதாரர் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்துவைத்தது.

Tags : Chennai ,Supreme Court ,Ramkumar Addison ,Trincomore ,Chennai High Court ,
× RELATED எதிர்ப்புக்கு பணிந்தது தவெக அரசு;...