×

கோடங்கிப்பட்டி பிரிவு அருகே மேம்பால பணிகளை முடிப்பது எப்போது?

 

கரூர், ஜூன் 16: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள வீரராக்கியம் பிரிவு மற்றும் கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது.இதில், கோடங்கப்பட்டி பிரிவுச் சாலையின் வழியாக கரூர் திருச்சி இடையே அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

இதே போல், கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, ஈசநத்தம், பாகநத்தம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.இதனை கவனத்தில் கொண்டு விபத்தினை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டும் இதுநாள் வரை பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, அனைவரின் நலன் கருதி இந்த உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Kodangipatti ,Karur ,Karur-Trichy Bypass Road ,Veerarakiyam ,Karur-Trichy Bypass Road… ,
× RELATED லாலாபேட்டை அருகே கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்