×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ1,10,880க்கு விற்பனை!

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென ரூ.2400 உயர்ந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் எகிறியது. தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து கொண்டே வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 10ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், பவுனுக்கு ரூ.3,200ம் குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,400க்கும் விற்பனையானது.

தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதே நேரத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,000, பவுனுக்கு ரூ.8 ஆயிரமும் குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, தங்கம் விலை நேற்று திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்வை சந்தித்தது.

அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,400க்கும் விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.

தங்கம், வெள்ளி விலை திடீரென உயர்ந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : Chennai ,
× RELATED நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; 3 நாட்கள்...