- டாஸ்மாக்
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் கலெக்டர்
- கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக் குழு
- மாவட்ட கூட்டுக் குழு
- ஜனாதிபதி
- ஜான்…
கோவை, ஜூன் 13: கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘’பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்’’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்ட கூட்டுக்குழு தலைவர் ஜான் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். எல்பிஎப் நிர்வாகிகள் ராக்கிமுத்து, தமிழ்செல்வன், விற்பனையாளர் சங்க நிர்வாகி தேனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து ஜான் அந்தோணிராஜ் கூறுகையில், ‘‘23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும். 500 மீட்டர் தூர கட்டுப்பாட்டை எப்எல்-2 மனமகிழ் மன்றங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை இதுபோன்ற தொடர் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
