சென்னை: சென்னை ஆலந்துார் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரிடம், ஆலந்துார் வடக்கு பகுதி தவெக செயலர் வேம்புலி என்பவர், அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் புகார் அளித்ததை அடுத்து, பரங்கிமலை போலீசார், பெண்கள் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதலவர் விஜய் பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படை திட்டம் என்பதை உருவாக்கி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மீது பாலியல் வழக்கு பாய்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பிதாகவும் தவெக நிர்வாகி வேம்புலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பரங்கிமலை போலீசார் வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தால் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வேம்புலியை நீக்குவதாக, எம்எல்ஏ-வும் சென்னை புறநகர் தவெக மாவட்ட செயலருமான சரவணன் அறிவித்துள்ளார்.
