×

பெண்களுக்கு எதிராக எந்த வகை குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை

சென்னை: பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாகவும், ஆன்லைன் மூலம் மன ரீதியாக பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சென்று, அவர்களுடன் பேசுவார்கள். அவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்துவார்கள். போலீசாருடன் தன்னார்வர்கள், பொதுமக்களுடன் இணைந்து பெண்கள் தொடர்பாக விழிப்புணர்வு செய்வோம். தமிழ்நாடு காவல்துறைக்கு மட்டும் 2,545 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். முழுமையாக எல்லா இடமும் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றும் நிலையை கொண்டு வரப்படும். பெண்களுக்கு உடல் ரீதியாக, ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மன ரீதியாக நடக்கும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sinhapen Special Task Force ,IG ,Bhavaneeswari ,Chennai ,Sinhapen Special Task Force IG ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...