×

பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

சென்னை: அதிகநாட்கள் பிரதமராக பணியாற்றி வரும் பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது:

இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து 3 தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாக திகழும் இந்திய பிரதமர், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi ,Modi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,India ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...