சென்னை: தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லை, கோவை, குமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் தமிழக கடேலாரப் பகுதிகள், மன்னார் வளைடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளிக்காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 13 -16 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
