ஆஸி. ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றுக்கு முன்னேறிய தயானந்த்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தகுதிச் சுற்று போட்டிகள் சிட்னியில் நடைபெற்றன. தகுதிச் சுற்றுக்கான போட்டியில் தரநிலை 4 பெற்றிருந்த இந்திய வீரரான சனீத் தயானந்த் 21-17, 21-15 என்ற கணக்கில். ஆஸ்திரேலிய வீரர் கரோனோவை வீழ்த்தினார். தொடர்ந்து மலேசியாவைச் சேர்ந்த மிங் ஹாங் லிம்மை 21-9, 21-16 என வீழ்த்தி முதல் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீரரான மன்ராஜ் சிங் தகுதிச் சுற்றுக்கான 2-வது சற்றில் மலேசிய வீரரிடம் 11-21, 18-21 என தோல்வியடைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, அமெரிக்காவின் லீ ஆர்டன் குவான் – ஜிங் ஸ்டான்லி ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய அர்ஜுன்-அம்சகருனன் ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories: