சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் மனோஜ்குமாருக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795 மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினார். ஆசிய 20 வயதுக்கு உட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற எஸ்.ரஞ்சித்குமாருக்கு ரூ.2 லட்சமும் சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசனுக்கு ரூ.4.65 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
