டி.20 கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் அவுட் பிரசித் கிருஷ்ணா இன்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி.20 கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டியும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டியும் நடக்கவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் விளையாடும் இந்திய டி20 அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 16 வீரர்கள் கொண்ட அணியாக அறிவித்திருந்தனர்.

இதில், வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருந்த முகமது சிராஜ், தற்போது நீக்கப்பட்டுள்ளார். பணிச்சுமை காரணமாக அவர் விலகியிருப்பதாக பிசிசிஐ நேற்று தெரிவித்தது. இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்து அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசண்டிகர் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: