×

அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றித் திரிந்த நாயை கொன்றுவிட்டதாக பாலிவுட் நடிகை கதறல்: மும்பை போலீசார் விசாரணை

 

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ‘மைக்கி’ என்ற நாய் வசித்து வந்தது. இதனை அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் அரவணைப்புடன் பராமரித்து வந்தனர். பாலிவுட் நடிகை மஞ்சுரி பட்னிஸ் (37) இந்த நாய்க்குத் தேவையான உணவுகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென அந்த நாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மஞ்சுரி மற்றும் குடியிருப்புவாசிகள், நாயைத் தேடி போஸ்டர்களை ஒட்டி தீவிரமாகத் தேடி வந்தனர்.

செக்யூரிட்டி ஊழியர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஒரு தனிநபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நாய் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்ட மஞ்சுரி பட்னிஸ், அந்த நாயின் மரணம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், ‘மைக்கி கட்டிடத்தின் அடித்தள பகுதியில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அதன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த ஜீவன் உயிருடன் இருக்கும்போதே ஒரு மூட்டைக்குள் கட்டி அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட போது என் இதயம் உடைந்துவிட்டது. வாயில் ரத்தம் வழிய அந்த நாய் துடித்ததைக் நினைத்தால் தாங்க முடியவில்லை. விலங்குகளுக்கு எதிரான இத்தகைய கொடுமைகளைத் தடுக்க ஒன்றிய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

மைக்கியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்’ என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு நடிகை ரிதிமா பண்டிட் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bollywood ,Mumbai ,Miki ,Mumbai, Maharashtra ,Manjuri Budnis ,
× RELATED நடத்தையில் சந்தேகம் இருந்ததால்...