சென்னை: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி. ஒரு டிஎஸ்பி , 2 துணை டிஎஸ்பிக்கள் என 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படைத்திட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. திட்டம். கடந்த மே 29ம் தேதி தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதல்வர் விஜய் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கடந்த மே 10ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரங்கள் வாரியாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்படும் என்று தனது இரண்டாவது கையெழுத்தை போட்டார். இந்த திட்டத்தை உடனே தமிழ்நாடு அரசும் அரசாணையாக வெளியிட்டது.
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் பெண் ஐஜி தலைமையில் தொடங்கப்பட உள்ளது. திட்டத்தின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு அதிரடிப்படையில் ஐஜி பவானீஸ்வரி தலைமையின் கீழ் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள், 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக கடந்த வாரம் 2 எஸ்ஐக்கள் உட்பட 18 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு என தனி சீருடைகளும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு ‘நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது.
