×

பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

மதுரை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கில், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நடைமுறை குறித்த விவரங்களை அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமங்களின் விவரம், நிலுவையில் உள்ள மற்றும் முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அரசு தரப்பே வரும் ஜூன் 29-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டை கட்டாயமாக்குவது தொடர்பாகவும், விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதே சமயம் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரளிக்கும் வசதியை ஏற்படுத்த விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது .

Tags : Madurai ,Sivakasi fireworks plant accident ,High Court ,
× RELATED மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்...