3 நாள் பயணமாக முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்

 

மீனம்பாக்கம்: டெல்லியில் நாளை மறுநாள் நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. அதில், கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய், நாளை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லி செல்கிறார். கடந்த முறை சந்தித்து பேசாத ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்களை இம்முறை விஜய் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே 3 நாள் பயணமாக அமைத்துள்ளதாகவும், 12ம் தேதி தனி விமானத்தில் மாலை 6 மணியளவில் சென்னைக்கு திரும்புவார் என்றும் சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: