பாஜ விற்பனைக்கு கொண்டு வந்த பொருட்களில் ஒன்று தான் தவெக: மதிவதனி தாக்கு

 

கோபி: திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோபி கொளப்பலூரில் நடந்தது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பேசியதாவது: தமிழகத்தில் தனியார் பேருந்துகள் மட்டுமே இருந்த நிலையில் அவற்றில் இருந்த தீண்டாமை நடைமுறையை ஒழிக்க அரசு போக்குவரத்து கழகம், மகளிருக்கு சொத்து உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார்.

தொலைநோக்கு சிந்தனையுடன் அவர் செயல்படுத்திய திட்டங்களால் தான் இன்று பெண்கள் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள். பெண்களை காவல்துறை, ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என தந்தை பெரியார் கூறிய கருத்தை, முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பெண்களை காவல்துறையில் சேர்த்தவர் தான் கலைஞர். தமிழகத்தில் பாஜ விற்பனைக்காக கொண்டு வந்த பொருட்களில் ஒன்று தான் தவெக. அது பொதுமக்களிடம் கொஞ்சம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து ஐபிஎஸ் என்ற பொருளையும் தமிழகத்தில் விற்பனைக்காக கொண்டு வருகிறது. இனியும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றார்.

Related Stories: