திருவண்ணாமலை, ஜூன் 9: ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு வெப்பம் வாட்டி வதைப்பது வழக்கம். இதேபோன்று தற்போது கோடைக்காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாய பணியாளர்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று 103 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பழச்சாறு மற்றும் கூழ்க்கடைகளில் மக்கள் திரண்டிருந்தனர்.
