×

பந்தலூர் எம்ஜிஆர் நகரில் பராமரிப்பு இல்லாத தடுப்பணை சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதி

 

 

 

பந்தலூர்,ஜூன்9:நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் தடுப்பணை பராமரிப்பின்றி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெல்லியாளம். இங்குள்ள பந்தலூர் எம்ஜிஆர் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கூவமூலா செல்லும் சாலையில் உள்ள தடுப்பணை மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த செக்டேம் முட்புதர்கள் சூழ்ந்து தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் தடுப்பணையை முறையாக பராமரித்து சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pandalur MGR Nagar ,Pandalur ,Nellialam Municipality ,Nellialam ,Nilgiris district ,
× RELATED புதர்களால் வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு