×

அனைத்து சமூகங்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக மாநில அளவில் முழுமையான சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் பின்தங்கிய நிலைக்கேற்ப உரிய வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான சமூக நீதி ஆகும். எனவே, வன்னியர் சமூகத்திற்கான உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கும், தமிழகத்தின் அனைத்து சமூகங்களுக்கும் சமமான முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadoss ,Tamil Nadu government ,Chennai ,PMK ,Tamil Nadu ,
× RELATED புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள்...