கோவை அருகே நள்ளிரவில் மினி பஸ்சுக்குள் புகுந்து இளம் ஜோடி உல்லாசம்: சிசிடிவி காட்சி வைரல்

 

கோவை: கோவை அருகே நள்ளிரவில் மினி பஸ்சுக்குள் புகுந்து இளம்ஜோடி உல்லாசமாக இருந்ததோடு பஸ்ஸில் இருந்த பேட்டரி, இருக்கையையும் திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர், கஸ்தூரிநாயக்கன்பாளையம், வடவள்ளி, மருதமலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துடியலூர் அருகே வழக்கம் போல சேவையை முடித்த மினி பஸ் டிரைவரும், கண்டக்டரும் அதனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒரு இளம் ஜோடி மினி பஸ்சுக்குள் புகுந்தனர். அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை அறிந்த அவர்கள், அதனை ஓரமாக திருப்பிவிட்டனர். பின்னர் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் பஸ்சில் இருந்த பேட்டரி, பயணிகள் இருக்கையை திருடிச்சென்றனர். ​நேற்று காலை வழக்கம் போல பணிக்கு வந்த டிரைவரும், கண்டக்டரும் பஸ்சின் பேட்டரி மற்றும் இருக்கைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பஸ்சில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது நள்ளிரவில் புகுந்த இளம் ஜோடி இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: