கேரள லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மார்த்தாண்டம், ஜூன் 8: பளுகல் போலீசார் காரக்கோணம் சிஎஸ்ஐ மெடிக்கல் கல்லூரி மருத்துவமனை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரித்ததில் கேரள மாநிலம் குளபடா உளமனைக்கல் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன்(56) என்பதும் அவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயசந்திரனை கைது செய்ததோடு லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

 

Related Stories: