சென்னை: அதிமுக தீர்ந்துபோன சக்தியல்ல; தமிழ்நாட்டை அலங்கோலப்படுத்தும் தவெக அரசை தீர்த்துக் கட்டப்போகும் சக்தி. கரூரில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தபோது அதற்கு பதில்கூட சொல்லாமல் ஓட்டம் பிடித்த சக்திதான் விஜய் என அதிமுக விமர்சித்துள்ளது.
மேலும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க” என தெரிவித்துள்ளது.
