சென்னை: தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜவில் இருந்து விலகி, புதிய கட்சியை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பாஜ மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தற்போது அண்ணாமலை பாஜவில் இருந்து விலகியுள்ளார். எனவே, தனக்கு இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அண்ணாமலை பாதுகாப்பிற்காகச் சுமார் 36க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அண்ணாமலையின் கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.
