×

மேட்டூர் அணையில் நீர் திறக்க வாய்ப்பில்லை குறுவை தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் மானியம்; அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இன்றைய நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 11.49 டி.எம்.சி, கபினி அணையில் 4.47 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 2.97 டி.எம்.சி, ஹேமாவதி அணையில் 11.41 டி.எம்.சி என மொத்தம் 33.45 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதனால் கர்நாடகம் திறந்து விட வாய்ப்பில்லை.

நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். எனவே,தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Mattur Dam ,Anbumani ,Chennai ,Bhamaka ,President ,Kaviri Irrigation ,Kaviri River ,Karnataka ,
× RELATED கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை...