×

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

சென்னை: நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை 2 முறையும் மற்றும் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Pragnyananda ,Norway Chess Tournament ,Chennai ,Magnus Karlsen ,
× RELATED திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில்...