சென்னை: பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்க வழிகாட்டுதல்கள் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரசவ கால சிக்கல்களை கையாள வார் ரூம்கள் மூலம் தீவிர கண்காணிப்பு. சிக்கல் உள்ள கர்ப்பிணிகளை உயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். பிரசவ கால பரிசோதனைகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க உத்தரவு அளித்துள்ளது. அதிக பிரசவ இறப்பு சதவீதம் கொண்ட மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
