மேற்குவங்க அரசியலில் பரபரப்பு : கட்சி அமைப்புகளை கூண்டோடு கலைத்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அக்கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கூண்டோடு கலைத்திருக்கிறார். மம்தா நியமித்த சோவந்தேவ் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க மறுத்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எழுப்பியதால் தற்போது கட்சியினுடைய அனைத்து அமைப்புகளையும் மம்தா கலைத்திருக்கிறார்.

பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்திருக்கிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரித்தபிரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்து கடிதம் வழங்கியுள்ளனர்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமூல் கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்க, மம்தா பானர்ஜி இந்த அதிரடி முடிவுவை எடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடியை தூக்கியதை தொடர்ந்து திரிணாமூல் காங்கிரசில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் மூன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்த, மம்தாவின் கட்சி கட்டுப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தீர்க்கமான பரிசீலனைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் அனைத்துக் குழுக்களும், அத்துடன் அதன் அனைத்து முன்னணி அமைப்புகளும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியானது அனைத்து நிலைகளிலும் சுயபரிசோதனை, செயல்பாட்டு ஆய்வு மற்றும் அமைப்புசார் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்முறையை மேற்கொள்ளும். இதன் அடிப்படையில், தாய் அமைப்பின் மற்றும் அனைத்து முன்னணி அமைப்புகளின் அமைப்புசார் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு, உரிய காலத்தில் அறிவிக்கப்படும். அமைப்பை வலுப்படுத்துவதிலும், புதிய வீரியத்துடனும் உறுதியுடனும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராவதில் கட்சி தொடர்ந்து உறுதியுடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: