×

அண்ணாமலை புதிய கட்சி துவக்கம்? பாஜ மீனவர் பிரிவு மாநில தலைவர் கட்சியிலிருந்து விலகல்

சென்னை: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறார் என தகவல் பரவியதை அடுத்து பாஜ மீனவர் பிரிவு மாநில தலைவர் கட்சியிலிருந்து விலகுவதாக, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக தகவல் பரவியது. இதனையடுத்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், அண்ணாமலை பாஜவில் இருந்து விலகுவது குறித்து தகவல் அறிந்த தமிழக பாஜவினர் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழக பாஜ மீனவர் பிரிவு மாநில தலைவர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி நேற்று முதல் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது, தமிழக பாஜவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Annamalai ,BJP fishermen ,Chennai ,BJP ,president ,Nainar Nagendran ,Tamil Nadu ,BJP… ,
× RELATED 103வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர்...