×

சித்தார்த் ஃபிட்னெஸ் ரகசியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் இளமையான தோற்றத்தினால், பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் நடிகர் சித்தார்த். இவரது உடல் கட்டு, சுறுசுறுப்பு மற்றும் இளமையான தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது கட்டுப்பாடான ஃபிட்னெஸ் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையே. இதைபற்றி தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

தினசரி உடற்பயிற்சியை நான் ஒருபோதும் தவறாமல் பின்பற்றி வருகிறேன். என்னைப் பொருத்தவரை, அதிக நேரம் ஜிம்மில் செலவிடுவதைவிட, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும் என்று நினைக்கிறேன். அந்தவகையில், கார்டியோ, ஸ்ட்ரென்த் டிரெயினிங், யோகா மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் பயிற்சிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். இதுதவிர,

*டிரெட்மில் ஓட்டம்
*சைக்கிள் பயிற்சி
*லைட் வெயிட் டிரெயினிங்
*யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங்
*கோர் ஸ்டபிலிட்டி பயிற்சிகள்

போன்றவை செய்து வருகிறேன். தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது எனது வழக்கமாக வைத்திருக்கிறேன்.

டயட்

ஃபிட்னெஸில் உடற்பயிற்சிக்கு இணையாக உணவுமுறையும் மிகவும் முக்கியம். அதனால் அதிக எண்ணெய், ஜங்க் உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். மற்றபடி, புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் இயற்கை உணவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறேன். அந்தவகையில், எனது தினசரி உணவுப் பட்டியலில்,

*காய்கறிகள் மற்றும் பழங்கள்
*புரோட்டீன் நிறைந்த உணவுகள்
*அதிக தண்ணீர் குடித்தல்
*குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்
*வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் போன்றவை இடம்பெறுகின்றன.

பொதுவாக, ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், உணவும், உடற்பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, மன நலமும் மிகவும் முக்கியமாகும். என்னதான், நாம் தினசரி உடற்பயிற்சிகளும், ஆரோக்கியமான உணவும் எடுத்துக் கொண்டாலும், மனது அமைதியாக இல்லை என்றால், அது அவரது ஓட்டு மொத்த வாழ்வியலையும் பாதித்துவிடும். எனவே ஒருவரது ஃபிட்னெஸில் மன நலமும் மிகவும் முக்கியமானது. எனவேதான், யோகா, தியானம் என மனதிற்கு அமைதி தரும் விஷயங்களையும் செய்து வருகிறேன்.

இதற்காக, எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் போதுமான தூக்கம், தியானம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறேன். அதன் மூலம் மனஅழுத்தத்தை குறைக்க முயற்சிக்கிறேன். இது தவிர, புத்தக வாசிப்பு மற்றும் இசை கேட்பது போன்ற பழக்கங்களாலும் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறேன்.

இளமையான தோற்றத்தின் ரகசியம் என்னவென்றால்

*ஒழுங்கான தூக்கம்
*ஆரோக்கியமான உணவு
*தொடர்ந்து உடற்பயிற்சி
*மனஅழுத்த கட்டுப்பாடு
*புகை மற்றும் மது பழக்கங்களை தவிர்த்த வாழ்க்கை முறை ஆகும்.

இன்றைய இளைஞர்கள் ஃபிட்னெஸ் என்பது உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்ல, நல்ல வாழ்க்கை முறைக்காகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்.உதாரணமாக, சிக்ஸ் பேக் உடலை விட, ஆரோக்கியமான மற்றும் இயல்பான உடல் அமைப்பே முக்கியம் என கருதுகிறேன்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

Tags : Siddharth ,Kungumam ,Dr. ,
× RELATED ரத்த அழுத்தம்