மகாராஷ்டிராவில் விவசாயக் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல்

 

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநில அமைச்சரவை, தலா ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 56 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள். மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2026–27ம் ஆண்டு மாநில பட்ஜெட்டின் ஒரு பகுதியாக விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். ரூ.2 லட்சம் வரை பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கின்றன. புன்யஷ்லோக் அகில்யாதேவி ஹோல்கர் ஷேத்காரி கர்ஜ்மாபி யோஜ்னா எனப்படும் இந்த திட்டம் செப்டம்பர் 30, 2025 வரை எடுத்த கடன்களை உள்ளடக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் ரூ.2 லட்சம் வரை பயிர் கடன்களில் தள்ளுபடி பெறுவார்கள். கூடுதலாக, கடன்களை நேரத்துக்கு சரியாக திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். திட்டத்தின் விவரங்களை வழங்கியபோது, பட்னாவிஸ் தகுதி பெறுவதற்கான தேதியை செப்டம்பர் 30, 2025 என நிர்ணயித்துள்ளார்.

பயிர்கடன் தள்ளுபடியை பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழு தரவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை, சுமார் 28–30 லட்சம் விவசாயிகளின் தகவல்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இறுதி தரவுத்தொகுப்பு இன்னும் 15–25 நாட்கள் ஆகும்.

மாநிலத்தின் 36 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 56 லட்சம் விவசாயிகள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் மற்றும் கிராமப்புற வங்கிகள்.பயனாளிகளின் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆதார் இணைப்பு மற்றும் e-KYC பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் இறுதிக்குள் விவசாயிகளின் கணக்குகளில் இதற்கான பலன்கள் நேரடியாகச் சென்றடையும்

Related Stories: