×

இஸ்ரேலை பல நாடுகள் கண்டிக்கும் நிலையில் மோடி மவுனம் காப்பது ஏன்?.. காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம்

 

புதுடெல்லி: போர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தினால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது.

இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் ராணுவ நடவடிக்கைகள் இந்த அமைதி முயற்சியை முடக்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி மட்டும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘உலகமே இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் நிலையில், பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பதன் மூலம் அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு உதவுகிறாரா? அவருக்கு தாய்நாட்டை விட தந்தை நாடு முக்கியமாகிவிட்டதா?’ என்று சாடியுள்ளார். இக்கட்டான இந்த சூழலில் ஒன்றிய அரசு இந்திய நலன்களை பாதுகாக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

Tags : Modi ,Israel ,Congress ,New Delhi ,Jairam Ramesh ,Lebanon ,
× RELATED சித்தூரில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் அளவீடு கற்கள் அகற்றம்