×

2026 மே மாதத்தில் 90.14 லட்சம் பயணிகள் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தகவல்

சென்னை: 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 90.14 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதா சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மாநகர மக்களுக்கும், மெட்ரோ ரயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகமான, பாதுகாப்பான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 90,14,959 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கடந்த 18.05.2026 அன்று ஒரே நாளில் 3,54,559 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை)பயன்படுத்தி 42,51,729 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி1,863 பயணிகளும், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR /Token 19,76,230; Online QR – 1,34,850; Static QR 2,00,496; Whatsapp – 4,20,920; Paytm 2,84,249; ONDC – 11,78,885; PhonePe – 2,51,093; CMRL Mobile App 66,959; Chennai One App – 1,97,773; IPL Event QR – 31,444; Ilaiyaraja Live Concert Event QR – 18,468) பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்றபயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியைவழங்குகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும் அனைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றியையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து கொண்டுள்ளது.

Tags : Chennai Metro Rail Company ,CMRL ,Chennai ,Chennai Metro ,Chennai Metro Railway Company ,Metro Rail Company ,Chennai Municipal ,Metro Rail ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...