மாஸ்கோ: உள்நாட்டு விநியோகத்தை பாதுகாக்கும் பொருட்டு, விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு 6 மாத காலத்திற்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தற்காலிக தடை ஜுன் 1 முதல் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு எரிபொருள் சந்தையில் விலையை கட்டுப்படுத்தவும், நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
