×

வயதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நெட்டிசன்; திருமணம் செய்து என்ன சாதித்து விட்டீர்கள்?.. காரசாரமான பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

 

மும்பை: தனது வயது மற்றும் திருமணம் செய்யாத நிலை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு நடிகை ஷமிதா ஷெட்டி காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கையும், பிரபல நடிகையுமான ஷமிதா ஷெட்டி (47) தனக்கு இன்னும் திருமணம் ஆகாதது குறித்து சமூக வலைதளத்தில் விமர்சித்த நபர் ஒருவருக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர், ‘உங்களுக்கு வயதாகிவிட்டது, பழைய அழகு இப்போது இல்லை. சரியான நேரத்தில் திருமணம் செய்திருந்தால் இந்நேரம் உங்கள் குழந்தைகள் வளர்ந்திருப்பார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அந்த நபரின் கணக்கைத் ஸ்னாப் ஷாட் எடுத்துப் பதிவிட்ட ஷமிதா ஷெட்டி, ‘ஆம், காலம் மாறும்போது தோற்றம் மாறுவது இயற்கையானதுதான். ஆனால், இந்த வயதிலும் நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். திருமணம் செய்துகொண்டு நீங்கள் அப்படி என்ன சாதித்துவிட்டீர்கள்?’ என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார். மேலும், ‘திருமணமாகாமல் தனியாக இருக்கும் எங்களைப் போன்ற பெண்களின் வயதைக் குறிப்பிட்டு அவமானப்படுத்தவும், உங்களின் ஆணாதிக்கச் சிந்தனைகளை எங்கள் மீது திணிக்கவும் ஏன் எங்களைப் பின்தொடர்கிறீர்கள்? தயவுசெய்து என்னை பின்தொடர்வதை உடனடியாக நிறுத்துங்கள்’ என்றும் அவர் சாடியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஷமிதா ஷெட்டி, பல்வேறு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது சக நடிகர் ராகேஷ் பாபத்துடன் காதலில் இருந்த அவர், பின்னர் 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவருடனான பிரிவை முறைப்படி உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Bollywood ,Mumbai ,Shamita Shetty ,Shilpa Shetty ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...